

ஹைதராபாத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் வைக்கப்பட்டுள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத்தில் 25 - வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி புதன்கிழமை இரவு நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் (ORR)ஒருடோல் பிளாசா அருகே இரண்டு லாரி டிரைவர்கள் மற்றும் இரண்டு கிளீனர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்டவரின் உடல் எரிந்தநிலையில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது.
டோல் பிளாசா அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியின் பின்புற டயரை பழுதாக்கி பாதிக்கப்பட்டவரை தங்கள் சதிவலைக்குள் நயவஞ்சகமாக சிக்க வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு சைபராபாத் போலீசார் அறிவித்தனர்,
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடைமருத்துவர் கொடூரமாக கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் நாட்டையேஉலுக்கியுள்ளது.
இந்நிலையில் ஷாட்நகர் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தை நடத்தினர், அங்குதான் நான்கு குற்றவாளிகளும் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சில போராட்டக்காரர்கள், ''இந்த குற்றவாளிகளுக்கு சமூகத்தில் இடமில்லை, எனவே அவர்கள் ஒரு 'என்கவுண்டரில் கொல்லப்பட வேண்டும்'' என்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால், எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுப்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தைச் சுற்றி கூடுதல் படைகளையும் நிறுத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மகாபூப்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள். தேசிய மகளிர் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஹைதராபாத் விரைந்தனர்.