ஹைதராபாத்தில் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

ஹைதராபாத்தில் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
Updated on
1 min read

பெண் கால்நடைமருத்துவர் ஒருவரின் எரிந்த உடலை நேற்றுமுன்தினம் கண்டெடுத்த நிலையில் நேற்றிரவு மற்றுமொரு சம்பவத்தில் இன்னொரு பெண்ணின் எரிந்த உடலை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இப்பெண்ணும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

கால்நடை மருத்துவராக பிரியங்கா ரெட்டி புதன்கிழமை காணாமல் போனதாக பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில் மறுநாள் காலை அவர் ஹைதராபாத் பெங்களூர் சாலை டோல் கேட் அருகே எரிந்த நிலையில் பாலத்தின்கீழே கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்போம் என்று தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி தெரிவித்தார். பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தெரு ஓநாய்கள் என்று கூறி தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர்கள் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இச்செய்தி நாட்டையே உலுக்கிய நிலையில் நேற்றிரவு இதேபோல இன்னொரு அதிர்ச்சியளிக்கும் நேற்றிரவு ஹைதராபாத்தில் நடந்துள்ளது மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சைபராபாத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது

ஹைதராபாத் மாநகரின் புறநகர் பகுதியான ஷாம்சாபாத் நகர், சைபராபாத் காவல் ஆணையகத்தின் எல்லைக்குள் வருகிறது. இங்குள்ள சிட்டுலாகுட்டா கோவில் சாலையில் 30லிருந்து 35க்குள் வயதுமதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் உடலை எரிந்த நிலையில் போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இவர் யார் என அடையாளம் தெரியவில்லை. தற்போது இவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற சமீபத்திய சம்பவமான கால்நடைமருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 48 மணிநேரத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது.

பரபரப்பான கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸார் பல்வேறு பகுதிகளை நோக்கி 10 குழுக்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியது. இதில் நான்கு லாரி ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவாளர்களை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இக்குற்றவாளிகள் ஷம்ஷாபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் சாலையில் உள்ள டோண்டுபள்ளி டோல் பிளாசா 25க்கு நெருக்கமான வயதுடைய வயதுடைய ஒருவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சடலத்தை ஒரு லாரியில் ஷாட்நகர் நகரத்திற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இவ்வாறு சைபராபாத் சைபராபாத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in