அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் 5 ஏக்கரை குறிவைக்கும் ஷியா வக்பு வாரியம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற நிலப்பிரச்சினை வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த 9-ம் தேதி வெளியான இதன் தீர்ப்பில் பிரச்சினைக்குரிய நிலம் இந்துக்களிடம் ஒப்படைக் கப்பட்டு அதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்கவும் உத்தரபிரதேச அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியம் கடந்த 27-ம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் மேல்முறையீடு செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என முடிவானது. இத்துடன் 5 ஏக்கர் நிலம் பெறுவதன் மீது பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அப்பிரச்சினையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உ.பி. ஷியா வக்பு வாரிய நிர்வாகிகள் அயோத்தி வழக்கு குறித்து ஆலோசனை செய்ய நேற்று முன்தினம் லக்னோவில் கூடினர். வாரியத்தின் தலைவர் வசீம் ரிஜ்வீ தலைமையிலான இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு ஏகமனதாக முடிவு எடுத்துள்ளனர்.

இதில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. அதேசமயம், 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் மறுத்தால் அதை தம்மிடம் அளிக்க அரசிடம் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தைப் பெற்று அங்கு சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்கவும் ஷியா வக்பு வாரிய நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

அயோத்தி வழக்கு தீர்ப்பு மூலம் கிடைக்கும் 5 ஏக்கர் நிலம் சன்னி முஸ்லிம்களுக்கு உரியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் சன்னி பிரிவினரே தொழுகை நடத்தி வந்தனர்.

இதனால், ஷியா பிரிவினரி டம் 5 ஏக்கர் நிலம் அளிக்கப் பட்டாலும் அதில் அவர்கள் சன்னிக் களுக்காக மசூதி கட்டுவது சாத்தியமல்ல. இதன் காரண மாகவே, அந்நிலத்தை பெற்று மசூதி அல்லாமல், மருத்துவமனை கட்ட ஷியா வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கருதப்படு கிறது. இவ்வாரியத்தின் தலைவ ரான வசீம் ரிஜ்வீ தொடர்ந்து பாஜக விற்கு ஆதரவாகப் பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in