‘‘கூட்டணி அமைப்பது கட்சிகளின் விருப்பம்’’ - மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

‘‘கூட்டணி அமைப்பது கட்சிகளின் விருப்பம்’’ - மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்ததை எதிர்த்து இந்து மகா சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப்பின் கடந்த ஒருமாதமாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் நடந்தன. இதில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியநிலையில், அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பட்னாவிஸ் 4 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து புதிய அரசை உருவாக்கியுள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா, காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்ததை எதிர்த்து இந்து மகா சார்பில் பிரமோத் பண்டிட் ஜோஇ என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் ‘‘ஜனநாயக நாட்டில் தேர்தலுக்கு பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்பது அரசியல் கட்சிகளின் விருப்பம். அரசியல் கட்சிகளின் இந்த உரிமையை நீதிமன்றம் தடுக்க முடியாது.

இதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். அதுபோலவே தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையும் ஏற்க முடியாது. அது நீதிமன்றங்களி்ன் வேலையும் அல்ல. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யுகிறாம்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in