

காஷ்மீரில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் சிலர் கொல்லப்பட்ட விவகாரத்தை நேற்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ் எழுப்பினார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கும்போது, “ஜம்மு காஷ்மீரில் கடந்த 30-35 ஆண்டுகளாக தீவிரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்போது தீவிரவாத சம்பவங்கள் கிட்டத்தட்ட இல்லை என்ற அளவுக்கு குறைந்துள்ளன. இதற்காக பாதுகாப்பு படையினரை நான் பாராட்டுகிறேன்” என்றார்.
காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக கூறி அவையை அரசு தவறாக வழிநடத்துகிறது என சுரேஷ் குற்றம் சாட்டினார்.
இதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கும்போது, “கடந்த ஐந்தரை ஆண்டுகளில் காஷ்மீரை தவிர நாட்டின் பிற பகுதிகளில் குறிப்பிடும்படியான தாக்குதல் சம்பவங்கள் ஏதுமில்லை. ஜம்மு காஷ்மீரில் 30-35 ஆண்டுகளாக தீவிரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன” என்றார்.