

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பணி யாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ஆக குறைக் கும் திட்டம் அரசுக்கு இல்லை. மத்திய அரசுப் பணி விதிகளின் கீழ் ஊழியர்கள் திறமைக் குறை வாகவோ, நேர்மைக் குறைவா கவோ இருந்தால் அவர்களை ஓய்வு வயதுக்கு முன்பே பணி யில் இருந்து விலக்க அரசுக்கு முழு உரிமை உண்டு.
அவ்வாறு நீக்கப்படுவதற்கு முன் குறைந்தது 3 மாத நோட்டீஸ் வழங்கப்படும். அல்லது 3 மாத ஊதியம் தரப்பட்டு நீக்கப் படுவார்கள். குரூப் ஏ அல்லது பி பிரிவில் பணியில் உள்ள ஊழியர்கள் 35 வயதுக்கு முன்பே பணியில் சேர்ந்து, அவர்கள் 50 வயதை எட்டியிருந்தால் இந்த விதிகள் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.