சம்பளம் தராமல் இழுத்தடிப்பு; வெளிநாட்டுவாழ் இந்தியரிடமிருந்து 13 ஆயிரம் மோசடிப் புகார்கள்

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Updated on
1 min read

சம்பளம் தராமல் இழுத்தடிப்பு தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியரிடமிருந்து 13 ஆயிரம் மோசடிப் புகார்கள் இதுவரை வந்துள்ளதாக மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் இன்று தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து சென்று உலகமெங்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்
இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலருக்கும் அவ்வப்போது சம்பள பாக்கி மற்றும் சம்பளம் தராமல் மோசடி செய்வது போன்ற பல ஏமாற்றங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், ''வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 102 நாடுகளிலிருந்து இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைகள் மற்றும் மோசடி செய்யப்படுவது குறித்து நிறைய புகார்களை அனுப்பி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுகுறித்து இந்த ஆண்டு 13,655 புகார்கள் வந்துள்ளன. இதில் சவுதி அரேபியாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவில் 3,844 புகார்கள் வந்துள்ளன. இதே வகையான பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாட்டுவாழ் இந்தியரிடமிருந்து கடந்த ஆண்டில் 17,379 புகார்கள் பெறப்பட்டன’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in