யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்
Updated on
1 min read

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றுவதை 14 நாட்களுக்கு தள்ளி வைக்கக் கோரி ஜூலை 29-ம் தேதி இரவு உச்ச நீதிமன்றத்தில் மேமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சிபந்த், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நள்ளிரவில் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜூலை 30-ம் தேதி மேமன் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டுக்கு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில்,

‘உங்களை குறிவைத்துள்ளோம். எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் அதை தாண்டி வருவோம்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் நீதிபதி மிஸ்ரா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, மிரட்டல் கடிதம் உண்மை யானதா என்பது குறித்து ஆராயப்படும். மேமனின் கூட்டாளிகள் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தன.

மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in