

இந்தியாவின் வெண்மை புரட்சி யின் தந்தை என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவம்பர் 26-ம் தேதி தேசிய பால் தினமாகக் கொண் டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த விழாவில் மத்திய கால்நடை, பால் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசும் போது, “உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத் தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
நாட்டின் பால் வளத்தை அதிகரித்ததில் வர்கீஸ் குரியன் பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. பால் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதி கரிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது” என்றார்.