

அயோத்தி விவகாரத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என சன்னி மத்திய வக்பு வாரியம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசம மாகப் பகிர்ந்து கொள்ள வேண் டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில், சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பிரச்சினைக்குரிய இடம் ராம் லல்லா தரப்புக்கே சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், பாபர் மசூதி கட்டுவதற்காக முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் வேறு இடத்தில் ஒதுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சன்னி மத்திய வக்பு வாரிய கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வாரியத்தின் தலைவர் ஜுபர் பரூக்கி செய்தியாளர்களிடம் கூறும் போது, “மொத்தம் உள்ள 8 உறுப் பினர்களில் 7 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் 6 பேர் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யத் தேவையில்லை என்று தெரிவித்த னர். எனவே பெரும்பான்மை உறுப் பினர்களின் கருத்து அடிப்படை யில் மறுஆய்வு மனு தாக்கல் செய் வதில்லை என முடிவு செய்யப்பட் டது.
அதேநேரம் மசூதி கட்டுவதற் காக, 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதுகுறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்” என்றார். -
பிடிஐ