

டெல்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தீட்டியிருந்த சதியை டெல்லி போலீஸார் முறியடித்தனர். இதுதொடர்பாக 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
சிரியா, இராக்கை தலைமையிட மாகக் கொண்டு ஐ.எஸ். தீவிர வாத அமைப்பு செயல்படு கிறது. இந்த அமைப்பை சேர்ந்த சில தீவிரவாதிகளை தேசிய புல னாய்வு அமைப்பினர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக டெல்லி போலீஸ் சிறப்பு படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன்பேரில் அசாமின் குவா ஹாட்டியில் ரஞ்சித் அலி, இஸ்லாம், ஜமால் ஆகிய 3 தீவிர வாதிகளை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு டிஎஸ்பி பிரமோத் குஷ்வாஹா கூறும்போது, “டெல்லி, நாட்டின் இதர பகுதி களில் தீவிரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட் டிருந்தது. அதனை முறியடித்துள் ளோம். அசாமின் குவாஹாட்டி நகரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களி டம் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.