

பெரும் சிக்கல்களுக்கு இடையே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தனது பணிகளை தொடங்கியுள்ளார்.
வரலாறு காணாத அளவில் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆட்சிமையக்க தங்களுக்கு பெரும் பான்மை இருப்பதாக கூறி 162 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
இதனிடையே இரண்டாம் முறை முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தனது வழக்கமான பணிகளை நேற்று தொடங்கினார். மும்பையில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு வந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் வேலையாக முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலையில் கையெ ழுத்திட்டார். அரசின் உதவிக்காக காத்திருந்த குசும் வெங்குர் லேக்கர் என்ற பெண்ணிடம் அந்தக் காசோலையை அவர் அளித்தார்.
இந்நிலையில் அஜித் பவாருடன் சென்ற என்சிபி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் மீண்டும் தங்களிடமே திரும்பியுள்ளனர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அனில் பாட்டீல், பாபாசாஹேப் பாட்டீல், தவுலத் தரோடா, நர்ஹாரி ஜிர்வார் ஆகிய 4 எம்எல்ஏக்கள் அஜித் பவாருடன் சென்றனர். இவர்கள் பாஜகவின் பிடியில் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் நேற்று காலை அந்த 4 எம்எல்ஏக்களும் தாயகத்துக்கே திரும்பிவிட்டனர் என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன. தற் போது பாஜகவிடம் அஜித் பவார் மட்டுமே இருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அஜித் பட்னாவிஸ் ஆலோசனை
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் ரகசிய ஆலோ சனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தவாடே, கிரிஷ் மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல்வரின் இல்லத்தில் இந்த ரகசியக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சரத் பவார் மறுப்பு
இதனிடையே அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பின்னணியில் நான் இருப்பதாகக் கூறுவது சரியல்ல என்று என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
அவர் நேற்று கூறும்போது, “பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸின் முடி வல்ல. அவரின் முடிவுக்கு நாங்கள் ஆதரவும் தெரிவிக்கவில்லை. பாஜகவுடன் அவர் கூட்டு சேர்ந்ததன் பின்னணியில் நான் இருப்பதாகக் கூறுவது மிகவும் தவறு. இதுபோன்ற தகவல்களை யார் உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்கிறார்கள்?
காங்கிரஸ், என்சிபி, சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்ட அஜித் பவாருடன் நாங்கள் தொடர்பில் இல்லை. அஜித் பவாரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். கஷ்டங்கள் வந்தாலும் அவை தற்காலிகமானவைதான், மாநில மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதே எனது அனுபவம். எனக்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கும் வரை, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்றார்.
சஞ்சய் ரவுத் நம்பிக்கை
இந்நிலையில் நேற்று செய்தி யாளர்களிடம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியதாவது:
என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடம்தான் முழு மையான பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அஜித் பவாருக்கு 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி தருவதற்கு பாஜக தயாராக இருப்பதாகக் கேள்விப் பட்டேன். ஆனால் இதே விஷயத்தை எங்களுடன் செய்து கொள்ள அவர் கள் தயாராக இல்லை. நாங்கள் பெரும்பான்மை பெற்றபின் நடக்கப் போகும் விஷயங்களைப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்
- பிடிஐ