Published : 26 Nov 2019 07:20 AM
Last Updated : 26 Nov 2019 07:20 AM

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு: டெல்லியில் சோனியா காந்தி போராட்டம்

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் இன்று உத்தரவை வழங்கவுள்ளது.

இதனால் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத் தப்பட்டது.

இதைத் தொடர்ந்து காங் கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

போதுமான எம்எல்ஏக்களின் ஆத ரவு தங்களிடம் இருந்தும் தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளு நரின் செயலை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங் கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் நேற்றுமுன்தினம் விசாரிக்கப்பட்டது.

அப்போது குடி யரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் நீக்கியது தொடர்பான கடிதங்கள், தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த எம்எல்ஏ ஆதரவுக் கடிதங் களை நேற்று தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ், என்சிபி கட்சிகளின் சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராயினர்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கியது தொடர்பாக ஆளுநர் அனுப்பிய கடிதம், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் அளித்த கடிதம், தேவேந் திர பட்னாவிஸ் ஆளுநரிடம் அளித்த கடிதம் ஆகியவை நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, “ஆளுநர் முடிவில் நீதிமன் றங்கள் தலையிடவே முடியாது. ஆளு நரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ அவரை அவசரப்படுத் தவோ முடியாது” என்றார்.

மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடும்போது, “முழு பெரும் பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா, “பெரும்பான்மை இருக்கிறது என்றால் இன்றே நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்க லாமே?” என்று கேள்வி எழுப்பினார்.

சிவசேனா சார்பில் ஆஜரான வழக் கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “குடியரசுத் தலைவர் ஆட்சியை அதி காலையிலேயே நீக்குவதற்கு, இது என்ன தேசிய அவசர நிலை பிரகட னமா? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பட்னாவிஸ் அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக் கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடும் போது, “கட்சி பேதமின்றி சட்டப் பேரவையின் மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப் பில் தேசியவாத காங்கிரஸ் தோற் றாலும் மகிழ்ச்சியே, ஆனால் வாக் கெடுப்புக்கு பாஜக முன்வரவில்லை” என்றார்.

தொடர்ந்து வாதாடிய முகுல் ரோத்தகி, “மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பட்னாவிஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாகக் கூறினார். அதை 3 அல்லது 4 நாட்களாக குறைக்க முடியாது. இன்றோ நாளையோ வாக் கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது” என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெரும் பான்மையை நிரூபிப்பது தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு உத்தரவிடுகிறோம் என்று அறிவித்தனர்.

ஓட்டலில் எம்எல்ஏக்கள்

இதனிடையே, குதிரை பேரத்துக் காக, எம்எல்ஏக்கள் கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் எம்எல்ஏக்களை ஓட்டல்களில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளன.

ஆளுநரிடம் 3 கட்சிகள் மனு

இந்நிலையில் பெரும்பான்மைக் குத் தேவையான எம்எல்ஏக்கள் எங்களிடம் இருக்கிறார்கள். எனவே எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் சிவ சேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சி களின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள் கூட்டாக நேற்று மனு அளித்தனர்.

சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் சார்பில் பால சாஹேப் தோரட், என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் மொத் தம் 162 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும் மூன்று கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிர விகாஸ் அகாதி’ என்ற கூட்டணியை அமைத்துள்ளதையும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

சோனியா போராட்டம்

இதனிடையே மகாராஷ்டிர ஆளு நரின் செயலைக் கண்டித்து டெல்லி யில் நேற்று நாடாளுன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், என்சிபி கட்சியினர் கலந்துகொண்டனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x