

2013-14-ம் நிதியாண்டில் 5 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 57 சதவீதம் நன்கொடை ரசீது விற்பனை மூலம் திரட்டப்பட்டுள்ளது என்று முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) கூறியுள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளின் 2013-14-ம் ஆண்டு வரவு-செலவு தணிக்கை அறிக் கையை பொதுமக்கள் பார் வைக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பாஜக இன்னும் தனது வரவு-செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்காததால் அதுபற்றிய விவரம் வெளியாகவில்லை. இந் நிலையில் மேற்கண்ட 5 அரசியல் கட்சிகளின் வரவு-செலவு அறிக் கையை தன்னார்வ அமைப்பான ஏடிஆர் ஆய்வு செய்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2013-14-ம் நிதியாண் டில் 5 கட்சிகளின் மொத்த வரு மானம் ரூ.844.71 கோடி. இதில் அதிகபட்சமாக தேசியவாத காங்கிரஸ் 598.06 கோடி திரட்டியுள்ளது. இது 5 கட்சிகளின் மொத்த வருமானத்தில் 70.8 சதவீதம் ஆகும்.
இரண்டாவதாக மார்க்சிஸ்ட் கட்சி ரூ.121.87 கோடி (மொத்த தொகையில் 14.43 சதவீதம்) திரட்டி யுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 2.43 கோடி மட்டுமே திரட்டியுள்ளது. இது 5 கட்சிகளின் மொத்த தொகையில் 0.29 சதவீதம் ஆகும்.
5 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 57 சதவீதம் நன் கொடை ரசீது விற்பனை மூலம் திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 477.316 கோடி திரட்டியுள்ளன. இது 5 கட்சிகளின் மொத்த தொகையில் 57.49 சதவீதம் ஆகும். கூப்பன் விற்பனை அல்லாத நன்கொடை பெற்றதன் மூலம் காங்கிரஸ் அதிகபட்சமாக ரூ.64.233 கோடி, இதையடுத்து மார்க்சிஸ்ட் ரூ.60.53 கோடி, பகுஜன் சமாஜ் ரூ.48.60 கோடி பெற்றுள்ளன.
5 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.844.71 கோடியில் பெரிய தொகையை நன்கொடையாக பெற்றதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.22 கோடி. இது மொத்த வருவாயில் 22 சதவீதம் ஆகும்.