

குற்றவாளிகள் விரைந்து தூக்கிலிடப்பட புதிய நீதிபதியால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, தனது 23வயது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவியை ஓடும் பஸ்ஸுக்குள் ஆறு நபர்கள் அடங்கிய ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்தது. பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண், சாலையில் தூக்கி வீசப்பட்டார், அவருக்கு பலவித தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்தார். பின்னர் கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நிர்பயா என பெயர் சூட்டப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில், ஒருவர் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், மற்றொருவர், சிறுவர். அவர் சிறார் ஒரு சீர்திருத்த இல்லத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து 2015 இல் விடுவிக்கப்பட்டார்.
மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கு 2013ல் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது டெல்லி உயர் நீதிமன்றத்தால் மார்ச் 2014 இல் உறுதி செய்யப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை 2017இல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனையை விரைந்து நிறைவேற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அக்டோபர் 31-ம் தேதி, திகார் சிறை நிர்வாகம் குற்றவாளிகளுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் சட்டத்தின்படி, குற்றவாளிகள் குடியரசு தலைவரிடம் இருந்து கருணை கோரலாம் எனவும் மரணதண்டனையை ஆயுள் தண்டனை வரை மாற்றலாம். கருணை மனுவை ஜனாதிபதி அனுமதித்தால், குற்றவாளிகள் தூக்கு மேடையில் இருந்து அவர்கள் நால்வரும் தப்பிக்க வாய்ப்புள்ளது. நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால், இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தண்டனை நிறைவேற்றம் மேலும் மேலும் தாமதமாகும் நிலையில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
குற்றவாளிகள் விரைந்து தூக்கிலிடப்பட வேண்டும் அதற்கு இவ்வழக்கு புதிய நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்பயா பெற்றோரின் வேண்டுகோளில் கூடுதல் அமர்வு நீதிபதி சதிஸ் அரோராவுக்கு வழக்கை மாற்றும்படி கோரப்பட்டிருந்தது. டெல்லியில் ஆறு மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி இன்று (திங்கள்கிழமை) நிர்பயா பெற்றோரின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த வழக்கில் நிர்பயாவின் பெற்றோர் தரப்பில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் சீமா சம்ரிதி குஷ்வாஹா, கூறுகையில், ''குற்றவாளிகளுக்கான சட்டபூர்வமான தீர்வுகள் முடிவுக்கு வந்துவிட்டநிலையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். கற்பழிப்பு குற்றவாளிகளுககு மரணதண்டனையை விரைவாக நிறைவேற்ற திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நாங்கள் நாடுகிறோம்'' என்றார்.