Last Updated : 24 Nov, 2019 07:45 PM

 

Published : 24 Nov 2019 07:45 PM
Last Updated : 24 Nov 2019 07:45 PM

மகாராஷ்டிரா விவகாரம்: இந்த ஆண்டில் விடுமுறையில் விசாரிக்கப்பட்ட 3-வது வழக்கு; நள்ளிரவு வரைநீடித்த விசாரணைகள் ஒரு பார்வை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகப் பதவி ஏற்பு செய்துவைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனு விடுமுறை நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே இந்த ஆண்டில் 2 முறை விடுமுறை நாட்களில் அதாவது நீதிமன்றம் செயல்படாத நாட்களில் முக்கிய விசாரணையும், தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில்..

  1. கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி, சனிக்கிழமை அன்று விடுமுறைநாளில் ஆண்டில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது.
  2. இரண்டாவதாக, கடந்த 9-ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது. இது விடுமுறை நாளில் தீர்ப்பளிக்கப்பட்ட 2-வது நிகழ்வாகும்.
  3. இந்நிலையில் விடுமுறைநாளா இன்று ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்துள்ளது.இந்த ஆண்டில் விடுமுறைநாட்களில் 3 முறை உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் கருதிச் செயல்பட்டுள்ளது

இதற்கு முன் நள்ளிரவில் சில விசாரணைகளும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளன. அவை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

1. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம், கர்நாடகத்தில் நடந்த தேர்தல் முடிவுகளுக்குப்பின் ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், ஜேடியு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் மனுத்தாக்கல் செய்து விசாரிக்கப்பட்டது.

2. 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 2015, ஜூலை 29-ம் தேதி நள்ளிரவில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. மறுநாள் காலை தூக்குத் தண்டனை என்பதால் நள்ளிரவில் விசாரிக்கப்பட்டது.

3. கடந்த 1985-ம் ஆண்டு தொழிலதிபர் எல்எம்.தாப்பர் என்ற மிகப்பெரிய தொழிலதிபருக்கு அன்னிய்செலாவனி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்குவதற்காக நள்ளிரவில் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. தொழிலதிபர் ஜாமீனுக்காக நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்தியது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. தலைமை நீதிபதி ஈஎஸ். வெங்கடராமையா நள்ளிரவில் எழுந்து வந்து மனுவை விசாரித்து ஜாமீன் அளித்தார்.

4. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின் நடந்த விசாரணை கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் 7-ம் தேதி அதிகாலை வரை நீதிபதியின் இல்லத்தில் விசாரணை நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா ஏற்கனவே இருக்கும் நிலை தொடரும் என்று உத்தரவிட்டார்

5. கடந்த 1978, பிப்.22 முதல் 1985, ஜூலை11ம்தேதிவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட், புகழ்பெற்ற ரங்கா-பில்லா வழக்கை நள்ளிரவில் விசாரித்தார். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதை நிறுத்திவைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

6. நொய்டா நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றவாளி மங்கன்லால் பரேலாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 2013, ஏப்ரல் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டது.

7. சத்ருஹன் சவுகான், மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சதாசிவம் விசாரித்தார். 16 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி இக்பால் விசாரித்துத் தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்தனர்

8. இதுதவிர கடந்த 1998-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங், ஜெகதாம்பிகா பால் வழக்கான பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரும் வழக்கும் நள்ளிரவில் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x