பிரதமர் மோடிக்கு நன்றி; மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி: அஜித் பவார் உறுதி

பிரதமர் மோடிக்கு நன்றி; மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி: அஜித் பவார் உறுதி
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை வழங்குவோம், பிரதமர் மோடிக்கு நன்றி அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலை என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார். முன்னதாக துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவாருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு அஜித் பவார் பதில் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ‘‘பிரதமர் மோடிக்கு எனது நன்றி. மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி ஏற்படுவதை உறுதி செய்வோம். மக்கள் நலனுக்காக கடுமையாக உழைப்போம்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in