

பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (திங்கள்கிழமை) விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகனினர்.
இந்நிலையில் இன்று ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.வி.சதானந்த கவுடா, பயணிகள் பாதுகாப்பு ரயில்வே அமைச்சகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அது நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
இது தவிர வேறு சில சவால்களையும் ரயில்வே துறை எதிர்கொண்டிருப்பதாகவும் அவற்றை சீர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ரயில்வே துறைக்கான இலக்குகள் திட்டமிடப்படும் என்றும். அதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதன் பின்னரே பொதுமக்களிடம் புதிய திட்டங்கள் குறித்து விளக்க முடியும் என்றும் கவுடா தெரிவித்தார்.
புல்லட் ரயில்கள் இயக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போதே மோடி பேசியதை சுட்டிக்காட்டியதோடு, புல்லட் ரயில்கள் குறித்து நிச்சயமாக மோடியுடன் ஆலோசிப்பேன் என்றார்.