

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் உள்ளது ‘ஆனந்த பவன்‘ பங்களா. இது நேரு குடும்பத்துக்கு சொந்தமானது. இந்த வீட்டில்தான் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தார்.
இப்போது இந்த வீடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையின் பராமரிப்பில் இருக்கிறது. ‘குடி யிருப்பு அல்லாத’ என்ற வகைப் படுத்தலின்கீழ் 2013-ம் ஆண்டி லிருந்து இந்த வீட்டுக்கு சொத்து வரி செலுத்தவில்லை. எனவே, நகராட்சி நிர்வாக சட்டத்தின்படி இந்த வீட்டுக்கு 2013-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டு ரூ.4.35 கோடிக்கு சொத்து வரிக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதை பிரயாக்ராஜ் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தின் தலைமை வரி மதிப்பீட்டு அதிகாரி பி.கே.மிஸ்ரா தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘ஆனந்த பவனுக்கு சொத்துவரி தொடர்பாக மதிப் பிட்டு, இதுதொடர்பாக ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்தோம். ஆனால், ஆட்சேபம் எதுவும் வராததால் வரி நிர்ணயம் இறுதி செய் யப்பட்டு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பிரயாக்ராஜ் மாநகராட்சியின் முன்னாள் மேயர் சவுத்ரி ஜிதேந்திர நாத் சிங் கூறும்போது, ‘‘ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை எல்லாவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு பெற்றுள்ளதால்ஆனந்த பவனுக்கு வரி விதிக்க முடியாது’’ என்றார்.