

பாரத் பெட்ரோலியம் நிறுவனத் தின் (பிபிசிஎல்) 53.29% பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமை யில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர் பாக நேற்று செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பிபிசிஎல் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன் நிர்வாகத் தையும் தனியாரிடம் ஒப்படைக்க வும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் பிபிசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமாக அசாமில் உள்ள நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மட்டும் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும்.
மேலும் 4 பொதுத்துறை நிறு வனத்தின் பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய கப்பல் கார்ப்பரேஷன் (எஸ்சிஐ), கன்டெய்னர் கார்ப் ஆஃப் இந்தியா (கான்கார்), டிஎச்டிசி, நார்த் ஈஸ்டர்ன் பவர் கார்ப் லிமிடெட் (நீப்கோ) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பிடிஐ