Published : 19 Nov 2019 06:39 PM
Last Updated : 19 Nov 2019 06:39 PM
சத்திஸ்கர் மாநிலத்தின் ரைகர் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பள்ளி வேன் டிரைவர் மற்றும் இருவர் பலாத்காரம் செய்ததாக எழுந்தக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிறன்று நடந்த இந்தச் சம்பவத்தில் திங்களன்று ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் லைலுங்கா போலீஸ் சரகப் பகுதியில் நடந்துள்ளது, பள்ளி வேன் ஓட்டுநர் சந்தோஷ் குப்தா (42), சிறுமியை பிக்னிக் என்று கூறி கடத்தியுள்ளார், மேலும் சிறுமியின் சக தோழிகள் அங்கு இருப்பதாகவும் கட்டுக்கதை விட்டுள்ளார் சந்தோஷ் குப்தா, இதனை நம்பி சிறுமியும் வேன் ஓட்டுநருடன் சென்றுளார்.
“லரிபானி அணைப்பகுதிக்கு சிறுமையை சந்தோஷ் குப்தா அழைத்துச் செல்ல அங்கு இன்னொரு நபரான புஷ்பம் யாதவும் இணைந்துள்ளார். ஆனால் தான் தவறாக பொய் சொல்லி அழைத்து வரப்பட்டுள்ளதை சிறுமி புரிந்து கொண்டு தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார், ஆனால் சிறுமியை இருவரும் கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்தனர்.
பிறகு இருவரும் சேர்ந்து சிறுமியை பிர்சிங்கா என்ற கிராமத்திற்குக் கடத்திச் சென்று அங்கு குடிசையில் அடைத்துள்ளனர், அங்கு இன்னொரு நபர் சஞ்சய் பைகாராவும் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளான்” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் பைகாரா கைது செய்யப்பட்டான், வேன் ஓட்டுநர் குப்தா மற்றும் யாதவ் ஆகியோரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.