அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க ‘நிர்மோகி’ நிர்வாகிகள் முடிவு

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க ‘நிர்மோகி’ நிர்வாகிகள் முடிவு
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் தொடர் பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 'நிர்மோகி அகாடா' நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ராம் லல்லா விராஜ்மனின் மனு மட்டும் ஏற்கப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.

அதேநேரம் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் அந்த அமைப்பை சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த அமைப் பின் மூத்த நிர்வாகிகள் அயோத்தி யில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். அறங்காவலர் குழுவில் நிர்மோகி அகாடாவை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு நிர்மோகி அகாடா செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் லால் வர்மா கூறும் போது, "முதல்கட்டமாக பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளோம். அதன் பிறகு மூத்த நிர்வாகிகள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்துவார்கள். அயோத்தி ராமர் கோயில் பணியில் எங்களுக்கும் முக்கிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in