

தெலங்கானாவில் அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் மேற் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசுக்கு தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சார கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத் துள்ள அறிக்கையில், “போராட் டம் மூலம் முதல்வர் ஆன சந்திரசேகர ராவ் நியாயமான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு.
சுமார் 48 ஆயிரம் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கியது அதைவிட தவறு. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு எதிர்க்கட்சி இல்லாமல் செய்த அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக புகார் கூறுகிறார்” என்று கூறியுள்ளார்.