

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே (63) நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகோய் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் 47-வது தலைமை நீதிபதி யாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற் றுக் கொண்டார். அவருக்கு குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச் சர்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
தாயிடம் ஆசி
பாப்டே பதவியேற்பு நிகழ்வை அவரது தாய் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்தார். பாப்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் தனது தாய் அருகே சென்று அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் பாப் டேவுக்கு நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு தரப் பினர் வாழ்த்து தெரி வித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி எஸ்.ஏ.பாப்டே பிறந்தார். இவரது தந்தை அர்விந்த் நிவாஸ் பாப்டேவும் மூத்த வழக்கறிஞர் ஆவார். சட்டம் படித்த பாப்டே, 1978-ல் மகாராஷ்டிரா வழக்கறி ஞர் சங்கத்தில் பதிவு செய்து கொண்டார். மும்பை உயர் நீதி மன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி னார். 2000-ஆவது ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி யானார். ஆதார் சட்டத்துக்கு எதி ரான வழக்கு உட்பட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களை விசாரித்த அமர்வில் பாப்டே இடம் பெற்றிருந்தார்.
அயோத்தி நிலப் பிரச்சினை வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விலும் பாப்டே இடம்பெற்றிருந்தார். இப்போது தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ள பாப்டே, வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23 வரை இப் பதவியில் நீடிப்பார்.
பிடிஐ