

பெங்களூருவில் சாலையோர பள்ளங்களை சீரமைக்கக் கோரும் விதமாக தண்ணீர் தேங்கியிருந்த பள்ளம் தாமரை குளமாக மாற்றப்பட்டு இருந்தது. அரசையும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக பாதல் நஞ்சுண்டசுவாமி என்பவர் இத்தகைய நூதன போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பெங்களூரு மாநகராட்சிக் குட்பட்ட எல்லையில் சுமார் 2500 சாலையோர பள்ளங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை சீரமைக்கக் கோரி பல் வேறு அமைப்பினரும் மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த கலைஞர்கள் கடந்த 3 மாதங்களாக சாலையோர பள்ளத்தில் மண்டை ஓடு வரை வது, திமிங்கலத்தை விடுவது, அனகோண்டா பாம்பை விடுவது உள்ளிட்ட நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சாலையோர பள்ளங்கள் சீரமைக் கப்படுகின்றன. இந்நிலையில் பாதல் நஞ்சுண்ட சுவாமி என்பவர் பெங்களூரு விமான நிலைய சாலையோரத்தில் இருந்த பள்ளத் தில் தண்ணீர் தேங்கி இருப்பதை கண்டார்.
அதனை சீரமைக்கக் கோரும் விதமாக செயற்கையான தாமரை பூக்களை செய்து, தேங்கியிருந்த நீரில் போட்டார். இதனால் அங்கு திடீரென உருவான தாமரை குளத்தை பொதுமக்கள் ஆச்சர்ய மாக பார்த்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், தற்போது மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் முடிந்ததும் சாலையோர பள்ளத்தை சீரமைப்பதாக உறுதியளித்தனர்.