

சபரிமலைக்கு செல்லும் பக்தர் களின் வசதிக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேரள தேவஸம் அமைச்சர் தலைமை யில் ஆலோசனை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ள இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களின் வசதிகளுக்காக மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோ சனை நடத்தினார். இந்தக் கூட்டத் துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மண்டல பூஜையையொட்டி நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட் டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது, அவற்றில் சில குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவையனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
இந்த முறை, பம்பை வரை பக்தர்களை கொண்டு செல்ல சிறிய அளவிலான வாகனங்களுக்கும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் உள்ள பேருந்து நிலையத்தில் பக்தர்கள் வரிசையாக பேருந்தில் ஏற்றப்படுவர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிடிஐ