மகளுக்கு மூக்கு அறுவை சிகிச்சை: சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல்

மகளுக்கு மூக்கு அறுவை சிகிச்சை: சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல்
Updated on
1 min read

இந்தி நடிகர் சஞ்சய் தத் தனது மகளின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக 30 நாள் பரோலில் மீண்டும் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

சஞ்சய் தத் (54) அவ்வப்போது பரோலில் வெளியில் வந்துபோவது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் அவர் தாக்கல் செய்த பரோல் மனுவை புனே காவல் ஆணையர் அலுவலகம் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்றதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரையில் சஞ்சய் தத் சிறையிலிருந்து வெளிவரலாம் என்றும், பின்னர் அவரது பரோல் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்த தாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கடந்த டிசம்பர் 24-ம்தேதி 14 நாள் பரோல் விடுப்பில் வெளியில் வந்தார்.

அப்போது வெளியான பீகே திரைப்படத்தைப் பார்ப்பதற்காகவே தத் விடுப்பில் வந்ததாக தகவல் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புனே சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் 2013 - 2014ம் ஆண்டில் மட்டும் சஞ்சய் தத் 118 நாட்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார்.

அவரது பரோல் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, பரோலை நீட்டிக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் விடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in