மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி: சோனியா காந்தியுடன் சரத் பவார் இன்று சந்திப்பு

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி: சோனியா காந்தியுடன் சரத் பவார் இன்று சந்திப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் பாஜக-சிவசேனா இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் எந்தக் கட்சியும் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி களின் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க முயன்று வருகிறது. இதற்காக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுக்கும் முயற்சியில் 3 கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, என்சிபி தலைவர் சரத் பவார் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இத்தகவலை என்சிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in