ஸ்ரீநகர் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார் மெகபூபா முப்தி 

மெகபூபா முப்தி | கோப்புப் படம்
மெகபூபா முப்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, இன்று ஸ்ரீநகரின் நகரப்பகுதியில் அமைந்துள்ள உள்ள அரசு விடுதிக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் அவர் ஜாபர்வான் சரகத்தின் மலை அடிவாரத்தில் சிறைச்சாலையாக மாற்றப்பட்ட ஒரு சுற்றுலா குடிசையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

ஆகஸ்ட் 5 அன்று அதிகாலையில் முஃப்தி, ஒமர் அப்துல்லா மற்றும் ஃபாரூக் அப்துல்லா ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகள் இன்று காலை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரின் ஜாபர்வான் சரக மலைஅடிவார குடிசைக்கு வந்தனர், ஆனால் சில கோப்பு மாற்றப் பணிகள் காரணமாக அவரை இடமாற்றம் செய்யும்பணி சற்று தாமதமாக வாய்ப்புள்ளதாகவும் விரைந்து இப்பணி முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், ஸ்ரீநகரின் நகர மையத்தில் அமைந்துள்ள அரசு இல்லம் சிறை என யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்தது. அதன் பின்னர் இன்று மாலை முப்தி நகர அரசு இல்ல சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறைச்சாலையாக மாற்றப்பட்ட குடிசையில் தங்கியிருப்பது குளிர்காலம் மற்றும் அடிக்கடி மின் வெட்டுக்கள் சிரமமாக இருந்ததால் இந்த நடவடிக்கை அவருக்கு அவசியமானது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், அவர் உமர் அப்துல்லாவுடன் ஹரி நிவாஸில் வைக்கப்பட்டார், ஆனால் பின்னர் அவர் செஸ்மா ஷாஹிக்கு மாற்றப்பட்டு மலையடிவார சுற்றுலா குடிசையில் தங்க வைக்கப்பட்டார்.

ஒமர் அப்துல்லா மற்றும் முப்தி இருவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107 வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று முறை மாநில முதல்வராகவும், தற்போது மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் அப்துல்லா, ஆகஸ்டு கைதுக்குப் பிறகு மீண்டும் செப்டம்பர் 17 அன்று கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in