Last Updated : 15 Nov, 2019 04:50 PM

 

Published : 15 Nov 2019 04:50 PM
Last Updated : 15 Nov 2019 04:50 PM

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ அதிவிரைவு ரயில்களில் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவு விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் உத்தரவின்படி, ஏசி முதல் வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் தேநீர் 6 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகவும், காலை சிற்றுண்டி ரூ.7 உயர்த்தப்பட்டு ரூ.140 ஆகவும், நண்பகல் உணவு, இரவு உணவு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.245 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

2-ம் வகுப்பு ஏசி பிரிவு, 3-ம் வகுப்பு ஏசி மற்றும் சேர் கார் பிரிவில் தேநீர் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.20 ஆகவும், காலை உணவு 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.105 ஆகவும், நண்பகல் உணவு மற்றும் இரவு உணவு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.185 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் மண்டலத்தில் புகழ்பெற்றதாக இருக்கும் நொறுக்குத் தீனிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை 350 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் ரூ. 50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பில், "பயணிகளுக்கும் தரமாகவும், அளவில் சரியான அளவில் இருக்கம் வகையில் புதிய வகையான உணவுகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x