ஆந்திராவில் மணல் தட்டுப்பாட்டுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டுக்கு எதிராக விஜயவாடாவில் கட்டிட தொழிலாளர்களுடன் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு 12 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார்.

விஜயவாடாவில் உள்ள தர்ணா சவுக் எனும் இடத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவாக கட்டிட தொழிலாளர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்
.
இந்தப் போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஆந்திரா முழுவதும் கடந்த 3 மாதங்களாக மணல் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், அதனை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, மணல் கொள்ளையர்களை அரசே உருவாக்கி வருகிறது.

இவர்கள் மூலம் ஆந்திரா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் திருட்டு மணல் அனுப்பி வைக்கப்படுகிறது. மணல் பிரச்சினையை தீர்க்க முடியாததால், கட்டுமானத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கு உடனடியாக அரசு தீர்வு காணாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in