

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றக் கூட்டு குழு (ஜேபிசி) ஒன்றையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் ஒருமித்த தீர்ப்பையே வழங்கியிருந்தனர். இருந்தபோதிலும், நீதிபதி கே.எம். ஜோசப் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை அமைப்புகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தலாம்” எனக் கூறியிருக்கிறார்.
- பிடிஐ