பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்ததால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் விடுவிப்பு: காஷ்மீரில் போலீஸார் நடவடிக்கை

பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்ததால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் விடுவிப்பு: காஷ்மீரில் போலீஸார் நடவடிக்கை
Updated on
2 min read

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கள் நேற்று திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜை சந்தித்து பேசுவதை தடுக்கவே அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகி யோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து கின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 23-24-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க 23-ம் தேதி டெல்லி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜுக்கு, பாகிஸ்தான் தூதரகத்தில் வர வேற்பு மற்றும் விருந்து அளிக்கப் படுகிறது. இதில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்த இரு கோஷ்டி (மிதவாதம் மற்றும் தீவிரவாதம்) தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் நேற்று காலை திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களின் வீடுகளில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பரபரப்பு ஏற் பட்டது. ஹுரியத் மாநாட்டு அமைப் பின் மிதவாத பிரிவினை தலைவர் மிர்வெய்ஸ் உமர் பரூக், மவுலானா முகமது அப்பாஸ் அன்சாரி, முகமது அஷ்ரப் செக்ராய், ஷபீர் அகமது ஷா, அயாஸ் அக்பர் உட்பட பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அதேபோல் ஹுரியத் மாநாட்டு தலைவர் சையத் அலி ஷா கிலானி யும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக்கை அவரது இல்லத்தில் இருந்து போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோதிபாக் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பிரிவினை வாத தலைவர்கள் திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது ஏன் என்பதற்கு அதிகாரிகள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜுடனான சந்திப்புக்கு அந்நாட்டு தூதர் அழைப்பு விடுத்ததால், மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பை தெரியப்படுத்த, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் அனைவரும் 2 மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப் பட்டு விட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். அதற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை.

சந்திப்பு உறுதி

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்லாமாபாத்தில் கூறும்போது, “இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு முன்பு, காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்க மானதுதான். நீண்டகாலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டெல்லிக்கு செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ், காஷ்மீர் பிரி வினைவாதிகளை சந்தித்துப் பேசுவார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in