Published : 14 Nov 2019 06:32 PM
Last Updated : 14 Nov 2019 06:32 PM

அயோத்தி வழக்கின் இந்து-முஸ்லிம் தரப்பு மனுதாரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்: யோகி ஆதித்யநாத் உத்தரவு

அயோத்தி வழக்கின் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பின் 18 மனுதாரர்களுக்கு துப்பாக்கிய ஏந்திய பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிறப்பித்துள்ளார்.

அதே நேரத்தில், இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு ஏற்கெனவே இருந்த பாதுகாவலர்கள் தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீநிருத்திய கோபால் தாஸ், மறைந்த முத்தவல்லி ஹாசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி மற்றும் ஹாஜி மஹபூப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் கூடுதலாக 18 பேருக்கு உ.பி.யின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சார்யா சத்யேந்தர் தாஸ், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் டாக்டர் நஜ்முல் ஹசன் கனி, இதே அமைப்பின் உ.பி. மாநிலத் தலைவரான நதீம், அவர்களது வழக்கறிஞர்கள் காலீத் அகமது மற்றும் பாத்ஷா கான் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x