Published : 14 Nov 2019 11:25 AM
Last Updated : 14 Nov 2019 11:25 AM

சபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை

* சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு 1991-ம் ஆண்டில் தொடுக்கப்பட்டது.

* அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மத நம்பிக்கையின் படியும், திருவிதாங்கூர் தேவசம்போர்டு விதியின் படியும் இது சரியானது என தீர்ப்பு வழங்கப்பட்டது

* சபரிமலையில் பெண் ஒருவர் ரகசியமாக வந்து வழிபாடு நடத்தியதாக 2006-ம் ஆண்டு ஜோதிடர் ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

* இதன் பின்னர், பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோயிலுக்குள் தான் 87-ம் ஆண்டு சென்றதாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

* இதுகுறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்ய கேரள போலீஸாருக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது.

* சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது.

* இந்த வழக்கு 2008-ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விற்குச் சென்றது.

* பின்னர் 2016 -ம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

* 2017-ம் ஆண்டு இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

*சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு பின்பற்றி வரும் பாரம்பரியம் கடைபிடிக்கப்படும் என வழக்கு விசாரணையின்போது கேரள அரசு முதலில் தெரிவித்தது.

* பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என அம்மாநில அரசு கூறியது.

* இதற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம், தந்திரி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

* இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்லலாம் என தீர்ப்பளித்தது.

*உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

*மறு சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x