

குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு நிமோனியா நோய் குறித்து ஓரு ஆய்வை அண்மையில் நடத்தியது.
நிமோனியாவால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் துணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து) டாக்டர் ராஜேஷ் கன்னா கூறியதாவது: 2018-ம் ஆண்டில் மட்டும் நிமோனியாவால் இந்தியாவில் 1,27,000 குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) இறந்துள்ளனர்.
கடந்த 2018-ல் இந்தியாவில் 1,27,000 குழந்தைகளும், நைஜீரியாவில் 1,62,000 குழந்தைகளும், பாகிஸ்தானில் 58 ஆயிரம் குழந்தைகளும், காங்கோவில் 40 ஆயிரம் குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 32 ஆயிரம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறக்கின்றனர். அதாவது நாள்தோறும் 2 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்” என்றார்.
- பிடிஐ