

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திஹார் ர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் உத்தரவிட்டார்.
இதனால் வீடியோ கான்பின்சிங் மூலம் புதனன்று டெல்லி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற டெல்லி கோர்ட் ,சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்ததுடன், இவ்வழக்கின் விசாரணையை நவ.,27 க்கு ஒத்திவைத்தது.