Published : 13 Nov 2019 11:09 AM
Last Updated : 13 Nov 2019 11:09 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழப்பு

சாம்பார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ளது சாம்பார் ஏரி. இந்தியாவிலேயே மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாக இது விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்லும். அந்த வகையில், இந்த ஆண்டும் ஏராளமான பறவைகள் இங்கு வந்துள்ளன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் நேற்று காலை ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்து கிடந்த பறவைகளை உடற்கூறாய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “எனது 40 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததில்லை. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் ஒரே நாளில் இறந்து கிடந்தது மக்கள் அனைவரையுமே சோகமடையச் செய்துள்ளது.

கலப்பட நீரை அருந்தியதால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். உடற்கூறாய்வுக்காக பறவைகளின் உடல்களை போபாலுக்கு அனுப்பியிருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பின்னரே, உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x