

2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ.356 கோடி என்று தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் ஆளும் கட்சி அளித்த ஆவணங்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது.
அக்.31ம் தேதி சமர்ப்பித்த ஆவணங்களின்படி காசோலைகள், ஆன்லைன் மூலம் நிதியாண்டு 2018-19-ல் ரூ.700 கோடி நன்கொடை பெற்றுள்ளது பாஜக. இதில் பாதி தொகை டாடா அறக்கட்டளை அளித்ததாகும்.
டாடா பங்களிப்பு செய்யும் புராக்ரசிவ் எலக்டோரல் ட்ரஸ்ட் மட்டும் ரூ.356 கோடி நன்கொடை அளித்துள்ளது, அதே போல் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அறக்கட்டளையான புரூடண்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் ரூ.54.25 கோடியை அன்பளிப்பாக பாஜகவுக்கு அளித்துள்ளது.
புரூடன்ட் அறக்கட்டளையின் பின்னணியில் டாப் கார்ப்பரேட்களான பார்தி குழ்மம், ஹீரோ மோரோ கார்ப்பரேஷன், ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெடண்ட், டி.எல்.எஃப், ஜேகே டயர்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் உள்ளன
எலக்டோரல் பாண்ட்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் விவரங்களில் சேர்க்கப்படமாட்டாது.