நாடு முழுவதும் ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் ரூ.3,300 கோடி அளவுக்கு ஹவாலா மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஈரோடு, புணே, ஆக்ரா, கோவா பகுதிகளில் சுமார் 42 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அப்போது பெருமளவில் ஹவாலா மோசடி மற்றும் போலி ரசீது மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஈரோட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹவாலா ஆபரேட்டர்கள் போலி ஒப்பந்தம், ரசீது மூலம் ரூ.3,300 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ரூ.150 கோடியை முறைகேடாக பெற்றுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in