காங்கிரஸில் இருந்து தனிமைப்படுத்த முயற்சி: சோனியாவுக்கு சசி தரூர் கடிதம்

காங்கிரஸில் இருந்து தனிமைப்படுத்த முயற்சி: சோனியாவுக்கு சசி தரூர் கடிதம்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்காக உன்மையாக பாடுபட்டு வரும் நிலையில் அதைப் பொருட்படுத்தாமல், தன்னை தனிமைப்படுத்த முயற்சி நடைபெறுவதாக சசி தரூர் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இதற்கு சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. மேலும் பிரதமர் மோடியை தரூர் அவ்வப்போது பாராட்டி வந்துள்ளார்.

இதையடுத்து, சசி தரூரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டித்திருந்தார். அன்றைய தினமே சசி தரூர் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், “இன்று காலையில் நடைபெற்ற நம் கட்சி கூட்டத்தில் என்னைப் பற்றி பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துகள் தொடர்பாக நாளிதழ் களில் வெளியாகி உள்ள செய்தியைப் படிக்கும்போது அதிர்ச்சியாகவும் வருத்தமளிப்ப தாகவும் உள்ளது. நான் கட்சிக் காக உண்மையாக பாடுபட்டு வருகிறேன். இதைப் பாராட்டாமல் என் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் புகார் கூறியுள்ளனர். இதன்மூலம் என்னை தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in