Published : 11 Nov 2019 09:49 AM
Last Updated : 11 Nov 2019 09:49 AM

சமூக ஊடகங்களில் விஷமக் கருத்து: 90 பேர் கைது

லக்னோ

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சமூக ஊடகங்களைக் கண்காணிக்க அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையங்கள் மூலம் சமூக ஊடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

அயோத்தி தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக கருத்துக்களை தெரிவித்த 90 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான ஆட்சேபத்துக்குரிய 3,712 பதிவுகள் மீது புகார்கள் வந்தன. அந்தப் பதிவுகளை நீக்கியும், சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x