

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விஎச்பி செயல் தலைவர் அலோக் குமார் நேற்று டெல்லியில் கூறியதாவது:
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பா னது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான உறுதியான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அயோத்தில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்த ரவுகளை செயல்படுத்த மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக் கும் என விஎச்பி எதிர்பார்க்கிறது.
ராமர் கோயிலுக்கான 60 சதவீத தூண்கள் மற்றும் உத்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களுக்கு இந்த நாள் ஒரு மகிழ்ச்சியான நாளாகும்.
இவ்வாறு அலோக் குமார் கூறினார். -பிடிஐ