Published : 10 Nov 2019 07:54 AM
Last Updated : 10 Nov 2019 07:54 AM

தொல்லியல் துறை அறிக்கை புத்தகமாக வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தகவல்

 புதுடெல்லி

அயோத்தியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்யப் பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை புத்தகமாக கொண்டு வரப்படும் என்று மத்திய கலை, கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று டெல்லியில் அவர் கூறும்போது, “ராம ஜென்மபூமி-பாபர் மசூதி கட்டிடம் இருந்த பகுதியில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பான ஆய்வு அறிக் கையை அவர்கள் வெளியிட்டுள்ள னர். இந்த அறிக்கையானது மத்திய அரசு சார்பில் புத்தகமாக விரைவில் வெளியிடப்படும். இந்த அறிக்கையைத் தயாரிக்க பணியாற்றிய அனைத்து தொல்லியல் நிபுணர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொல்லியல் ஆய்வு

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கையின்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் அகழாய்வு செய்த தொல்பொருள் ஆய்வுத்து றை கண்டறிந்தது என்ன?

1976-77-ல் முதன்முறையாக வும், 2003-ல் 2-வது முறையாக வும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அகழாய்வு செய் தனர். அகழாய்வின் முடிவில் தொல்பொருள் ஆய்வுத்துறை தந்த அறிக்கை:

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப் படவில்லை. பாபர் மசூதிக்குக் கீழ் ஒரு கட்டிடம் இருந்துள்ளது. அந்தக் கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் கட்டிடத்தைப் போல் அல்லாமல் வேறுமாதிரியாக இருக்கிறது. அது குப்தர்கள் காலத்தைச் சேர்ந்தது போல் உள்ளது.

அந்த கட்டிடத்தின் கீழ் 15-க்கு 15 மீட்டர் சுற்றளவுள்ள அடித்தளம் உள்ளது. மேலும் சில முக்கியமான பொருட்கள் கட்டிடத்தின் நடுப்பகுதியில் கிடைத்தன. வட்டவடிமான அந்தக் கோயில் 7-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். மேலும் சர்ச்சைக்குரிய நிலத்தின் வட தெற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 50 மீட்டர் பரப்புள்ள கட்டிடமானது 11-ம் நூற்றாண்டு அல்லது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுதவிர மேலும் ஒரு பெரிய கட்டிடம் அங்கு கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சர்ச்சைக்குரிய அந்த பாபர் மசூதிக் கட்டிடம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அந்தக் கட்டிடத்தின் கீழிருந்து 50 தூண்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் சில அரசர்கள் காலத்து இடிபாடுகளும் அங்கு கண்டெடுக்கப்பட்டன. அந்த எஞ்சிய பொருட்கள் புத்தர்கள், ஜெயின் கோயில்களின் இடிபாடுகளாக இருக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x