Published : 09 Nov 2019 11:32 AM
Last Updated : 09 Nov 2019 11:32 AM

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #AYODHYAVERDICT

அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக ட்விட்டரில் உலகளவில் #AyodhyaJudgment, #RamMandir, #AyodhyaHearing ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.

அயோத்தி வழக்கில், ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க ஆயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்நிலையில் உலகளவில் ட்விட்டரில் #AYODHYAVERDICT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

இதுதவிர, #AyodhyaJudgment, #RamMandir, #AyodhyaHearing ஆகிய ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்திய அளவில், #JaiShriRam #RamMandir, #AyodhyaJudgment, #AyodhyaHearing ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.

முன்னதாக, அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தேசத்தின் அமைதி, நல்லிணக்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு, ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x