Published : 08 Nov 2019 07:49 AM
Last Updated : 08 Nov 2019 07:49 AM

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நாளை திறக்கிறார்

புதுடெல்லி

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ் நாளின் பெரும் பகுதியை பாகிஸ் தானில் உள்ள கர்தார்பூரில் கழித் தார். அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா உள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா வையும் பாகிஸ்தானின் கர்தார் பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப் பட்டுள்ளது.

குரு நானக்கின் பிறந்த நாள் வரும் 12-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி, தேரா பாபா நானக் குருத்வாராவில் நாளை நடைபெறும் விழாவில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பாகிஸ்தானின் கர்தார்பூர் குருத் வாராவில் நாளை நடைபெறும் விழாவில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் புதிய வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.

பாஸ்போர்ட் விவகாரம்

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப், இஸ்லாமாபாத்தில் நேற்று கூறியபோது, "நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. கர்தார் பூர் குருத்வாராவுக்கு புனித யாத் திரை மேற்கொள்ளும் இந்திய சீக் கியர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று கூறும்போது, "கர்தார்பூர் வழித்தடம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் பயண ஆவணங்கள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சீக்கிய பக்தர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது அவ சியம்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ் தானின் கர்தார்பூருக்கு புனித யாத் திரை மேற்கொள்ளும் முதல் குழு வில் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உள்ளிட்ட சுமார் 550 பேர் இடம்பெற்றுள்ளனர். கர்தார்பூர் குருத்வாராவில் காணிக் கையாக செலுத்த வெள்ளி கிரீடம், வாள் ஆகியவற்றை மன்மோகன் சிங்கிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் நேற்று வழங்கினர்.

பாகிஸ்தானில் நடைபெறு விழாவில் பங்கேற்க காங் கிரஸ் மூத்த தலைவரும் இம்ரான்கானின் நண்பருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.

இதன்பேரில், கர்தார்பூர் வழித் தடத்தில் சீக்கிய பக்தர்கள் குழு வோடு சென்று இம்ரான் கான் விழாவில் பங்கேற்க அனுமதி கோரி மத்திய வெளியுறவு அமைச் சகத்துக்கு சித்து 2 முறை கடிதம் அனுப்பினார். இதற்கு அமைச்சகம் பதிலளிக்காத நிலையில் அவர் நேற்று 3-வது கடிதத்தை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப் பினார். இதை பரிசீலித்த மத்திய அரசு சித்துவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x