

வெலிங்டன்
நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் (37) பதவியேற்று கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது. தொழிலாளர் கட்சியின் இளம் தலைவராகவும் நியூசிலாந்தின் இளம் பிரதமராகவும் விளங்கும் ஜெசிந்தா ஆர்டன், தனது 2 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை இரண்டே நிமிடங்களில் சொல்லி வீடியோவை வெளியிட்டார்.
அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கியதோடு அவற்றை இரண்டே நிமிடங்களில் சொல்லியதால் வீடியோவை புறக்கணிக்காமல் லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்துள்ளனர். வீடியோவை பதிவிட்ட 3 நாட்களில் 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், வீட்டு வசதித்துறை சார்பில் 2,200 புதிய வீடுகள் கட்டியது, நெடுஞ்சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றியது போன்ற சாதனைகளை ஜெசிந்தா கூறியுள்ளார். இதற்காக அவரை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.