Published : 05 Nov 2019 05:38 PM
Last Updated : 05 Nov 2019 05:38 PM

டெல்லி போலீஸ் ‘பாஜக-வின் ஆயுதப்பிரிவு’ போல் செயல்படுகிறது: ஆம் ஆத்மி கடும் தாக்கு 

புதுடெல்லி, பிடிஐ

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து டெல்லி போலீஸாரின் ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்த ஆம் ஆத்மி கட்சி போலீஸ் ப்பிரிவு அரசியல் கட்சி போல் மாறிவிட்டது, பாஜகவின் ஆயுதப்பிரிவு போல் டெல்லி போலீஸ் செயல்படுகிறது, இதனால் சட்டம், ஒழுங்கு பின்னடைவு கண்டுள்ளது என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆயிரக்கணக்கான போலீஸார் சாகெட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கூறும்போது, “இந்திய தண்டனைச் சட்டம் 144-ம் தடைச்சட்டம் அமலில் உள்ளது, 4 பேருக்கு மேல் காரணமின்றி ஒரு இடத்தில் கூடக் கூடாது எனும்போது எப்படி இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது? ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்,

பிறகு தொடர் ட்வீட்களில் அவர் கூறியதாவது:

டெல்லி போலீஸுக்கு பாஜக கொடுக்கும் தைரியம் அதாவது நாம் போலீஸ் ராஜ்ஜியத்தில் இருக்கிறோம் என்றும் கூறும் அளவுக்கு பாஜக அவர்களுக்கு தைரியம் கொடுத்து வருகிறது

டெல்லியில் அடிப்படை சட்டம் ஒழுங்கு பற்றிய குறைந்தப் பட்சக் கவலையாவது போலீஸாருக்கு இருக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் செருக்குடன் இருக்கிறார்கள். டெல்லி போலீஸார் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுள்ளனர், பாஜகவின் ஆயுதப்பிரிவு போல் செயல்படுகின்றனர்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கை முழுதும் தோல்வியடையச் செய்துள்ளார் அமித் ஷா. 70 ஆண்டுகளில் இல்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை உருவாக்குவது உடைப்பது என்று அமித் ஷா சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்.

தலைநகரில் மோசமான சூழ்நிலை உள்துறை அமைச்சரின் திறமையின்மையைக் காட்டுகிறது.

சூழ்நிலையை மத்திய அரசு முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கலாம். மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழக்கறிஞர்கள் பொறுப்பு, போலீஸார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குபவர்கள், இந்நிலையில் இந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் துரதிர்ஷ்டவசமானது” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x