பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
Updated on
1 min read

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் ஆகியோர் டெல்லி யில் நேற்று சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் ஆலோசனை நடத்து வோம் என்றும் காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தை பட்டியலில் பிரதானமாக இடம்பெற வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பு வலியுறுத்தியது.

இதை ஏற்காத இந்திய அரசு, உபா கூட்டறிக்கையின்படி தீவிர வாதம் குறித்து மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியது. இதனால் சனிக்கிழமை நள்ளிரவில் இருதரப்பு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது.

ராஜ்நாத் சிங் பேட்டி

இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று அவர் கூறியதாவது:

அண்டை நாடுகளுடன் சுமுக உறவைப் பேண இந்தியா விரும்பு கிறது. அதன் அடிப்படையில் ரஷ்யா வின் உபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளின் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த கூட்டறிக்கையை மீறும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டது. பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்புக்கும் பங்கிருக் கிறது, காஷ்மீர் விவகாரத்தை பேச்சு வார்த்தை பட்டியலில் பிரதானமாக சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிடிவாதம் செய்தது.

தீவிரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று உபா கூட்டறிக்கை யில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. இதை பாகிஸ்தான் அப்பட்டமாக மீறியது.

இந்தியத் தரப்பில் பேச்சுவார்த் தையை ரத்து செய்யவில்லை, பாகிஸ்தான்தான் ரத்து செய்தது. வருங்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதற்கு நான் பதில் அளிக்க முடியாது. இந்த கேள்வியை பாகிஸ்தான் அரசிடம் தான் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் முப்தி வருத்தம்

காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது நகரில் கூறும்போது, “இந்திய, பாகிஸ்தான் பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டிருப் பது வருத்தம் அளிக்கிறது. ரஷ்யா வில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேசி பேச்சுவார்த் தைக்கு வித்திட்டது வீணாகியுள் ளது. இருதரப்பும் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in