

இரா.வினோத்
பெங்களூரு
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் சீருடை அணியாமல் சிறப்பு சலுகைகளை அனுபவிப்ப தாக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சசிகலா சீருடை அணியாமல் சிறையில் இருந்து வெளியே செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சசிகலா சீருடை அணியாமல் சிறையில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியா னது. சிறையில் பார்வையாளர் களை சந்திக்க சசிகலா காத் திருந்தபோது காவலர்கள் இந்த புகைப்படத்தை எடுத்ததாக கூறப்பட்டது.